பாளையில் நெகிழி பயன்பாட்டினை தவிர்க்க விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது
உலகில் பல்வேறுபட்ட நிலைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகமாகிக் கொண்டே இருக்கும் சூழலில், பூமியின் சுற்றுச் சூழல் சீரழிந்து வருவதை உணர்ந்த சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் பலர் பல்வேறு நிலைகளில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அவ்வகையில் நெல்லை மாவட்ட சுற்றுச் சூழல் நண்பர்கள் குழுவானது பள்ளி மாணவர்களிடையே பிளாஸ்டிக் பயன்படுத்த மாட்டோம் என்ற விழிப்புணர்வையும் உறுதி மொழியையும் பண்பாடாக வளர்த்து வருகிறார்கள்.
பாளை மணக்காவளம்பிள்ளை மருத்துவமனை தெருவில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் மத்தியில் சுற்றுச் சூழல் விழிப்புணர்வு நிகழினை நடத்தி இனி நாங்கள் பிளாஸ்டிக் பயன்படுத்த மாட்டோம் என்ற உறுதிமொழி ஏற்பையும் நடத்தினார்கள்.
சுற்றுச்சூழல் நண்பர்கள் குழு கண்ணன் நடத்திய விழிப்புணர்வு பயிற்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் மாது தலைமையேற்க, நைட்பேர்டு குளோபல் பவுண்டேசன் நிறுவனர் டேனியல் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பிளாஸ்டிக் இனி பயன்படுத்தவே மாட்டோம் என உறுதிமொழி ஏற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.
சுற்றுச்சூழல் நண்பர்கள் பசுமை நண்பர்கள் குழு முனைவர் முத்துசாமி வன்னியப்பன், பிளாஸ்டிக் பல் துலக்கிக்கு மாற்றாக மூங்கிலாலான பல் துலக்கிகளை மாணவர்களுக்கு வழங்கி ஊக்கப்படுத்தினார். மேலும் நெல்லை மாவட்ட பசுமை நண்பர்கள் குழு கணேசன், தேனி ஜெயபிரகாஷ் ஆசிரியர்கள் தேவேந்திரன், வள்ளியம்மாள், சாந்தி, மகேஸ்வரி, பானுமதி, சன்முகபிரியா, வெங்கடலட்சுமி மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
தீபம் அறக்கட்டளை பால்ராஜ் நன்றியுரை கூறினார்